கோத்தகிரியில் உள்ள அரவேனு பஜாரில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த எந்திரம் கடந்த சில மாதங்களாக பழுதடைந்து கிடக்கிறது. இதனால் யாருக்கும் பயன்படாமல் காட்சிப்பொருளாக இருக்கிறது. அங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளும் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பழுதாகி கிடக்கும் அந்த குடிநீர் ஏ.டி.எம். எந்திரத்தை பழுது நீக்கி மீண்டும் பயன்பாட்டுக்கு ெகாண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.