தென்தாமரைகுளம் அருகே நாடான்ஊற்று ஓடை உள்ளது. ஓடையை பொதுமக்கள் குளிப்பதற்கு, துணிகளை துவைப்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த ஓடையில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், ஓடையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், அந்த பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, நாடான்ஊற்று ஓடையில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதுடன், ஓடையை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.