தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் சோழன்நகர் உள்ளது. இப்பகுதியில் முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் சோழன்நகர் பகுதியில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகளும், சாலையில் நடந்து செல்பவர்களும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.