மழைநீர் வடிகால் வேண்டும்

Update: 2024-11-17 12:04 GMT

தஞ்சை மாவட்டம் தொண்டராயன்பாடி கிராமத்தில் காலனிதெரு உள்ளது. இங்கு முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லை. மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துவிடுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மழைநீர் தேங்காமல் இருக்க காலனிதெருவில் உரிய மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்