தஞ்சை கீழவாசல் பகுதியில் பழைய நெல்லுமண்டி தெரு உள்ளது. மழைக்காலங்களில் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து கொள்கிறது. முறையான வடிகால் வசதி இல்லாததால் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், குடியிருப்புவாசிகள் மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.