நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக சாலைகள், தெருக்களின் ஓரத்தில் அதற்கான கேட் வால்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான வால்வுகள் பழுதடைந்து காணப்படுவதால், அதில் இருந்து குடிநீர் வெளியேறி சாலைகளில் வீணாக பாய்கிறது. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்து காணப்படும் வால்வுகளை அகற்றி விட்டு புதிய வால்வுகள் அமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.