மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி சீரமைக்கப்படுமா?

Update: 2024-10-13 10:35 GMT

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஆம்பலாப்பட்டு தெற்கு கீழக்கோட்டை தெருவில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி உள்ளது. இந்த தொட்டி முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து இருக்கிறது. தொட்டியை தாங்கிபிடித்துள்ள தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இரும்பு கம்பிகளும் வெளியே தெரிகிறது. இதன்காரணமாக மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் நிலை உள்ளது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்