சிதம்பரம் அருகே வரகூர்பேட்டை கிராமத்தில் தாமரை குளம் உள்ளது. இந்த குளம் தூர்ந்துபோய் காணப்படுகிறது. இதனால் மழைக்காலத்தில் இந்த குளத்தில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.