ஆனைமலை தாலுகா கோட்டூர் டவுன் பஞ்சாயத்து 20-வது வார்டில் ஆழியாறு நகர், நெல்லித்துறை மன்னம் பகுதி மலைவாழ்மக்கள் குடியிருப்பில் புதிதாக அமைத்த குடிநீர் திட்டம் மூலம் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. அத்துடன் தரமற்ற குழாய்களை தரைக்கு மேலேயே பதித்ததால் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகுகிறது. எனவே, உடனடியாக குடிநீர் வினியோகிக்க வேண்டும்.
கனக்கன், ஆனைமலை.