தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா இலுப்பைகோரை பகுதி புதுமனைகாலனியில் குளம் உள்ளது. இந்த குளம் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. குளத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. தற்போது குளத்தில் இருக்கும் நீர் கழிவுநீராக மாறி இருக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.