மதுரை காளவாசல் பைபாஸ் ரோடு பொன்மேனி பஸ் நிறுத்தம் அருகே நீண்ட நாட்களாக குடிநீர் இணைப்பு உடைந்து சாலையில் தண்ணீர் வழிந்தோடுகிறது. இதனால் குடிநீர் வீணாவதுடன் சாலையில் இருக்கும் பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீணாகும் குடிநீர் இணைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.