மோகனூர் நவலடியான் கோவில் வாய்க்கால் முழுவதும் மதுபிரியர்கள் கரையோரம் அமர்ந்து மது குடித்து விட்டு பாட்டில்களை வீசி செல்கின்றனர். இதனால் வாய்க்கால் நீர், நிலம் மாசடைகிறது. மேலும் வாய்க்கால் கரையோரம் யாரும் செல்ல முடியாத வகையில் சிலர் மது குடித்து விட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே குடித்து விட்டு பாட்டில்களை வீசி செல்பவர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பால், நாமக்கல்.