தஞ்சை மாநகராட்சி குருவிகார தெருவில் வடிகால் பாலம் ஒன்று உள்ளது. இந்த வடிகால் பாலம் சாலையின் கீழ் பகுதியாக வடிகால் செல்வதற்காக சிறிய பாலம் அமைக்கப்பட்டது. இந்த வடிகால் பாலம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளது. பாலத்தில் ஓரத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் பாலத்தை சீரமைக்க வேண்டும்.