சிதம்பரம் அருகே காலாமேடு கிராமத்தில் உள்ள குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் வழிந்து ஓடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உடைந்த குழாய் வழியாக கழிவுநீர் கலப்பதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும்.