மதுரை கிழக்கு கொடிக்குளம் ஊராட்சி 1-வது பிட்டில் உள்ள நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. நீர்த்தேக்க தொட்டி உள்ள தூண்களில் விரிசல் ஏற்பட்டு சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். எனவே புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?