பிரம்மதேசம் அருகே உள்ள வேப்பேரி ஏரியை அதிகாரிகள் முறையாக பராமரிக்காமல் விட்டு விட்டனர். இதனால் ஏரி தற்போது தூர்ந்துபோய் காணப்படுகிறது. இதன் காரணமாக ஏரியில் மழைக்காலங்களில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது. எனவே ஏரியை முறையாக தூர்வாரி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.