பவானி அருகே ஆண்டிகுளம் ஊராட்சி 3-வது வார்டுக்குட்பட்ட மெயின் ரோட்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?