கூடலூரில் இருந்து தேவர்சோலை செல்லும் சாலையில் மைக்காமவுண்ட் பகுதியில் பல இடங்களில் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதேபோன்று 1-ம் மைல் பகுதியிலும் குழாய்கள் உடைந்து நீண்ட நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இதை சம்பந்தப்பட்ட துறையின் கவனத்துக்கு கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இனிவரும் நாட்களிலாவது குடிநீர் வீணாவதை தடுக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.