பவானி அருகே உள்ள ஒலகடம் பேரூராட்சிக்குட்பட்ட புகையிலைரெட்டியூர் மற்றும் குங்குமபாளையம் ஆகிய ஊர்களுக்கு சரிவர குடிநீர் வினியோகிக்கப்படுவதில்லை. இதனால் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது. இந்த ஊரிலுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் குழாய், தண்ணீர் தொட்டி அமைத்து குங்குமபாளையம் மற்றும் புகையிலைரெட்டியூர் பகுதி மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?