புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள மாதம்பாளையம் ஊராட்சி பிருந்தாவன் நகர் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் இருந்து வந்தது. இதுபற்றிய செய்தி 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து ஊராட்சி அதிகாரிகள் பிருந்தாவன் நகர் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகத்துக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.