வேலூர் மாநகராட்சி 4-வது வார்டான செங்குட்டை பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இந்தப் பகுதியில் அமுதம் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு நீர் ஏற்றும்போது பணியாளர் இல்லாத நேரத்தில் தொட்டி முழுவதுமாக நிரம்பி பல்லாயிரக்கணக்கான லிட்டர் நீர் வீணாகி வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை பகுதி சேறும் சகதியுமாக மாறுகிறது. உணவுப் பொருட்களை வாங்கி செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. தொட்டிக்கு நீர் ஏற்றும்போது, நீர் நிரம்பி வழியாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.எஸ்.லோகேஷ் குமார், காட்பாடி.