மொடக்குறிச்சி அருகே உள்ள 46 புதூர் ஊராட்சியில் உள்ள பெரியசெட்டிபாளையத்தில் சமீபத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. அப்போது ஒரு சில இடங்களில் ஏற்கனவே பதித்திருந்த குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வீணாக ரோடுகளில் ஓடுகிறது. ஒருசில இடங்களில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக பள்ளிக்கூட வாகனங்கள் சிரமப்பட்டு செல்கின்றன. உடனே குழாய் உடைப்பை சரிசெய்யவும், குழிகளை மூடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.