பயனற்ற அடிபம்பு

Update: 2022-09-14 13:26 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஒகளுர் கிராமம் அம்பேத்கர் நகரில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அடிபம்பு ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது இந்த அடிபம்பு பழுதடைந்து கடந்த ஒரு மாதமாக பயனற்று கிடக்கிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்