கூடலூரின் 21-வது வார்டு பகுதியான லோயர்கேம்பில் புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் பணிகள் இன்னும் முழுமை அடையாமல் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்