ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் ஆக்கிரமிப்புகள் பெருகி வருகிறது. இந்த ஏரியின் நீர் வழி பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஏரிக்கு நீர் வரத்து இல்லை. கடந்து 10 ஆண்டுகளாக ஏரி வறண்டு கிடக்கிறது. மேலும் அந்த சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் தட்டுபாடும் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அர்ஜூன், ஓசூர், கிருஷ்ணகிரி.