திருப்பூரில் பல்வேறு இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் நேரம் குறைகிறது. திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து குழாய் பதித்து பல நூறுகோடி செலவு செய்து குடிநீரை கொண்டு வருகிறது. அப்படி கொண்டு வரப்படும் குடிநீ்ர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் முன் வீணாகலாமா. திருப்பூர் கொங்கு மெயின் ரோடு எம்.எஸ். நகர் பஸ்நிறுத்தம்அருகில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. இதை சரி செய்ய வேண்டும்.