குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-06 12:38 GMT
கூடலூர் நகர பகுதி மக்களுக்கு லோயர்கேம்பில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குழாய் வழியாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு 16-வது வார்டு தரை தண்ணீர்தொட்டி, மேல்நிலை தண்ணீர்தொட்டிகள் மூலம் நிரப்பி தனித்தனியாக வார்டு பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தரை தண்ணீர் தொட்டி மேற்கு பகுதியில் நகர விரிவாக்க பகுதிகளுக்கு கொண்டு செல்லும் குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி செல்கிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய நகராட்சி முன் வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்