திருப்பூர் குமரன் ரோடு அருகே உள்ள வீதியில் ரோட்டோரத்தில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த குழாயிலிருந்து வெளியேறும் குடிநீர் ரோட்டில் பாய்ந்து கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பாய்வதால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகியுள்ளது. எனவே இன்னும் குடிநீர் வீணாகாமல் இருப்பதற்கு அதிகாரிகள் உடனடியாக குழாய் உடைப்பை சீரமைப்பார்களா?.