சிவகிரி வேட்டுவபாளையம் அருகே மின்னக்காடு குடியிருப்பு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப் பட்டு தனியங்கி கைப்பம்பும் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கைப்பம்பு மூலம் பொதுமக்கள் தண்ணீர் இரைத்து வந்தார்கள். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கைப்பம்பு பழுதடைந்து விட்டது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே கைப்பம்பு குழாயை சீரமைக்கவேண்டும்.