குடிநீர் பிரச்சினை

Update: 2022-08-01 16:24 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கமலாபுரம் கூட்டு ரோடு பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு ஆழ்துளை கிணறு மூலம் சிறு மின்விசை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு நீர் ஏற்றப்பட்டு அதிலிருந்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. நாளடைவில் அடிக்கடி பழுது காரணமாக சிறு மின்விசை நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் சப்ளை ஏற்றப்படவில்லை. இதனால் தொடர்ந்து பல மாதங்களாக இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் குடிநீர் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.

-அஜய், மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்