பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமம் மாரியம்மன் கோவில் அருகில் அண்மையில் பாலம் மற்றும் கால்வாய் கட்டப்பட்டது. அதில் தற்போது பெய்து வரும் மழையால் தண்ணீர் தேங்கி வெளியே செல்ல முடியாமல் நிற்கிறது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.