சிவகங்கை மாவட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் மனுக்களை கொடுப்பதற்கும், குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளவும் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் குடிதண்ணீர் இன்றி அவதியடைகின்றனர். எனவே குடிநீர்தொட்டியை சுத்தம் செய்து குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.