வீணாகும் குடிநீர்

Update: 2023-08-09 10:09 GMT

கூடலூர் நகருக்குள் பொதுமக்களுக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக ஆங்காங்கே குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. இதில் பெரும்பாலான இடங்களில் குழாய்கள் மிகவும் பழுதடைந்து இருக்கிறது. மேலும் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. குடிநீர் குழாய்களை சீரமைக்க ஒதுக்கப்படும் நிதியும் முறையாக பயன்படுத்தப்படுவது இல்லை. எனவே பழுதடைந்த குழாய்களால் குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்