திறப்பு விழா காணாத குடிநீர் மையம்

Update: 2022-07-24 16:02 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பஸ் நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-2019-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை அதனை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் குடிநீருக்காக அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகளின் நலன் கருதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.சேகர், ஊத்தங்கரை.

மேலும் செய்திகள்