கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோடு வரதராஜபுரம் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகே குடிநீர் குழாய் உடைந்து காணப்படுகிறது. இதனால் குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது. மேலும் சாலையும் சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனிமேலாவது உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.