கூடலூர் அப்துல் கலாம் நகரில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் வினியோகம் சீராக நடைபெறவில்லை. அப்பகுதியில் உள்ள குழாய்கள் பெரும்பாலான இடங்களில் உடைந்து குடிநீர் வெளியேறி வீணாகிறது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் பெரும் அடைந்து வருகிறார்கள். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.