வீணாகும் குடிநீர்

Update: 2023-06-14 09:09 GMT

கூடலூரில் இருந்து காளம்புழா செல்லும் சாலையில் அதிகாரி வயல் பகுதியில் பழுதடைந்த குழாயில் இருந்து குடிநீர் அதிகளவில் வெளியேறி சாலையோரம் ஆறாக ஓடுகிறது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குடிநீர் வீணாவது தொடர்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குழாயை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்