கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் குடிநீர் குழாய் வால்வு தொட்டி திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள், அந்த தொட்டிக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்கு மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.