பந்தலூர் அருகே உள்ள கூவமூலா ஆதிவாசி காலனியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு போதிய குடிநீர் வசதி இல்லை. இதனால் அவர்கள் குடிநீருக்காக நீண்ட தொலைவுக்கு அலைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக ஆதிவாசி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.