கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஹெல்த்கேம்ப் செல்லும் சாலையில் குடிநீர் குழாய்கள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் குடிநீர் சாலைகளில் வீணாக வழிந்து ஓடுகிறது. இதை சீரமைக்க வேண்டும், குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனிவரும் காலங்களில் கோடை காலத்தை கருத்தில் கொண்டு குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.