கூடலூரில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு செல்லும் சாலையோரம் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் வினியோகத்தின்போது குடிநீர் வீணாகி வருகிறது. குடிநீர், சாலையில் வழிந்தோடுவதால், அந்த வழியாக செல்பவர்கள் சிரமம் அடைகின்றனர். மேலும் கோடைகாலம் நெருங்கும் வேளையில், குடிநீர் வீணாகினால், தேவையில்லாத தட்டுப்பாடு ஏற்படும். எனவே குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.