கடமலைக்குண்டு அருகே தேவராஜ்நகர்-அய்யனார்புரம் இடையே கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி தேனி பிரதான சாலையில் தேங்குவதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். குடிநீர் குழாய்களை முறையாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.