பெரம்பலூர் மாவட்டம், கீழப்பெரம்பலூர் ஊராட்சி வேள்விமங்கலம் ஆதிதிராவிடர் நல சமுதாயக்கூடம் முன்பு கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.