தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-11-06 13:19 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஒரு பாலிடெக்னிக் அருகே உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தற்போது பெய்த மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இந்த வழியே தினமும் ஏராளமான வாகனஓட்டிகள் பயணிக்கின்றனர். குறிப்பாக பள்ளி- கல்லூரி மாணவர்கள் இந்த வழித்தடத்தில் பயணிக்க முடியாமல் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்