குடிநீர் இன்றி மக்கள் அவதி

Update: 2022-07-14 17:05 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, ஆலத்தூரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நீர்த்தேக்க தொட்டி இடித்து பல ஆண்டுகளாகியும் புதிதாக கட்டப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் சமைப்பதற்கும், குடிப்பதற்கும், தங்களின் அன்றாட தேவைக்கும் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்