பெரம்பலூர் மாவட்டம், விளாமுத்தூரில் இருந்து சிறுவாச்சூர் செல்லும் சாலையில் ஒரு பகுதியில் ஓடை ஒன்று உள்ளது. அந்த ஓடையில் செல்லும் தண்ணீர் சாலையில் செல்கிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே அந்த சாலையில் மேம்பாலம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ேகட்டுக்கொள்கிறோம்.