பெரியகுளம் தாலுகா டி.வாடிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா காலனியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இங்கு 10 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.