மீண்டும் ஆழ்துளை கிணறு அமைக்கப்படுமா?

Update: 2022-09-24 17:47 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி 26-வது வார்டு கோனேரிப்பட்டி காந்தி நகரில் அடி பம்புடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. தற்போது அந்த அடிபம்புடன் கூடிய ஆழ்துளை கிணற்றை அகற்றிவிட்டனர். இதனால் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி மீண்டும் அடிபம்புடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

--பிரபு, கோனேரிப்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்