நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் திருமலைப்பட்டி ஊராட்சி தெத்துகாடு பகுதியில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தரைமட்ட குடிநீர் தொட்டி ஒன்று சுமார் ரூ.3 லட்சத்தில் கட்டப்பட்டது. இந்த குடிநீர் தொட்டிக்கு இதுவரை மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் சுமார் 2 ஆண்டுகளாக குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை சொல்லியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அப்பகுதி பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க குடிநீர் தொட்டிக்கு மின்இணைப்பு வழங்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.