நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள நடந்தை மாதா கோவில் பஸ் நிறுத்தம் அருகே கபிலர் மலையில் இருந்து கந்தம்பாளையம் வரை காவேரி குடிநீர் நீர்த்தேக்க தொட்டியின் மூலம் வினியோகம் நடைபெற்று வருகிறது. நடந்தை மாதா கோவில் பஸ் நிறுத்தம் அருகே தார் சாலை ஓரத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிவரும் வருவதால் கந்தம்பாளையம் பகுதியில் குடிநீர் வினியோகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உடைந்த குடிநீர் குழாயை சீர் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-அருள், நாமக்கல்.